Top
undefined
Begin typing your search above and press return to search.

காயத்திற்கு பிறகு முதல் போட்டியில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா!

காயத்திற்கு பிறகு முதல் போட்டியில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா!

Vignesh KBy : Vignesh K

  |  29 Feb 2020 5:41 AM GMT

இந்தியா கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. இவருக்கு முதுகுயில் ஏற்பட்டகாயத்தால் அறுவை சிகிச்சை செய்தனர். அதன் பிறகு ஐந்து மாதங்கள் கிரிக்கெட் விளையாடவில்லை.

இந்த தருணத்தில் டாக்டர் டி. ஒய். பாட்டில் டி20 கோப்பை தொடரில் களம் இறங்கி விளையாடினர். நேற்று நடந்த போட்டியில் இவர் ரிலையன்ஸ்-1 அணிக்காக விளையாடினர். ரிலையன்ஸ்-1 - பாங்க் ஆஃப் பரோடா அணிகள் மோதியது.

இதில் இவர் 25 பந்துகளில் நான்கு சிக்சர்களுடன் 38 ரன்கள் அடித்தார். இவரது ஆட்டத்தால் ரிலையன்ஸ் 1 அணி 8 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது.

அதன் பின்னர் இவர் பந்து வீச்சில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் இவர் விளையாடிய ரிலையன்ஸ் 1 அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

Next Story