Top
undefined
Begin typing your search above and press return to search.

ஐ.எஸ்.எல் கால்பந்து: ஐதராபாத் - ஜாம்ஷெட்பூர் போட்டி டிராவில் முடிந்தது!

ஐ.எஸ்.எல் கால்பந்து: ஐதராபாத் - ஜாம்ஷெட்பூர் போட்டி டிராவில் முடிந்தது!

Vignesh KBy : Vignesh K

  |  14 Feb 2020 7:02 AM GMT

ஐதராபாத்தில் நேற்று நடந்த ஐ.எஸ்.எல். கால்பந்து லீக் ஆட்டத்தில் ஐதராபாத் - ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின. அந்த ஆட்டம் இறுதியில் டிராவில் முடிந்தது.

ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. அதில் 10 அணிகள் விளையாடும். ஐதராபாத்தில் நேற்று இரவு நடந்த லீக் போட்டியில் ஐதராபாத் எப்.சி. மற்றும் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதியது.

அந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி முதல் கோலை அடித்தது. இதனால் முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் அணி முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் ஜாம்ஷெட்பூர் அணி ஒரு கோல் அடித்தது. இறுதியில் போட்டி 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

Next Story