Top
undefined
Begin typing your search above and press return to search.

ஐ.பி.எல் போட்டி நடைபெற்றால் விளையாடுவேன் - டேவிட் வார்னர்!

ஐ.பி.எல் போட்டி நடைபெற்றால் விளையாடுவேன் - டேவிட் வார்னர்!

Vignesh KBy : Vignesh K

  |  19 March 2020 11:05 AM GMT

ஐ.பி.எல் போட்டி வருகின்ற 29 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது ஆனால் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தற்போது எந்த ஒரு கிரிக்கெட் போட்டி நடக்கவில்லை. இதனால் வீரர்கள் அவர்களுடைய வீட்டிலேயே இருந்து வருகிறார்கள்.

கொரோனா வைரஸ் தொற்று ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் கட்டுப்பாட்டில் வந்து விட்டால் பிசிசிஐ ஐ.பி.எல் போட்டி நடத்த அடுத்தகட்ட முயற்சியை எடுக்கும்.

இந்த தருணத்தில் பி.சி.சி.ஐ ஐ.பி.எல் போட்டியை நடத்தினால் நான் விளையாடுவேன் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

டேவிட் வார்னர்க்கு பதிலாக அவரது மேனேஜர் கூறுகையில்: பி.சி.சி.ஐ இந்த ஆண்டின் ஐ.பி.எல் போட்டியை உறுதியாக நடத்தினால் நான் விளையாடுவேன் வார்னர் கூறியுள்ளார்.

ஆனால் ஆஸ்திரேலியா அரசு பயண தடையை விதித்துள்ளது. அந்த தடை என்னவென்றால் எந்த ஒரு நபரும் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது என்பதுதான்.

தற்போது ஐ.பி.எல் போட்டியில் விளையாட 17 ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

Next Story