Top
undefined
Begin typing your search above and press return to search.

ஐ.சி.சி டி20 பேட்ஸ்மேன் தரவரிசை: இரண்டாவது இடத்தில் கே.எல்.ராகுல்!

ஐ.சி.சி டி20 பேட்ஸ்மேன் தரவரிசை: இரண்டாவது இடத்தில் கே.எல்.ராகுல்!

Vignesh KBy : Vignesh K

  |  28 Feb 2020 5:57 AM GMT

ஐ.சி.சி கிரிக்கெட் கவுன்சில் தற்போது சர்வதேச டி20 போட்டி சிறந்த வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை துபாயில் வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா அணியின் கே.எல்.ராகுல் 823 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

முதல் இடத்தில் பாகிஸ்தானின் பாபர் ஆசம் 879 புள்ளிகளுடன் இருகிறார் மற்றும் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் 820 3-வது இடத்தில் இருக்கிறார்.

மேலும் இந்தியா அணியின் கேப்டன் விராட் கோலி 673 புள்ளிகளுடன் 10-வது இடத்திலும் துணை கேப்டன் ரோகித் சர்மா 662 புள்ளிகளுடன் 11-வது இடத்திலும் உள்ளனர்.

Next Story