Top
undefined
Begin typing your search above and press return to search.

டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக ஷுப்மான் கில்லுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் - ஹர்பஜன் சிங்!

டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக ஷுப்மான் கில்லுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் - ஹர்பஜன் சிங்!

Vignesh KBy : Vignesh K

  |  13 Feb 2020 7:42 AM GMT

இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா - மயங்க் அகர்வால் தொடக்க வீரர்களாக களம் இறங்கி வந்தனர். தற்போது ரோகித் சர்மா காயத்தால் டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக ப்ரித்வி ஷா அணியில் இடம்பிடித்தார்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி வரும் 21ஆம் தேதி ஆரம்பிக்கிறது.அதில் தொடக்க வீரராக மயங்க் அகர்வால் மற்றும் அவருடன் விளையாட ஷுப்மான் கில் மற்றும் ப்ரித்வி ஷா இடையே கடும் போட்டி நடந்து வருகிறது. இந்த தருணத்தில் ஷுப்மான் கில்லுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என இந்தியா பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.


இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில்: டெஸ்ட் தொடரில் ப்ரித்வி ஷாவுக்கு பதிலாக ஷுப்மான் கில்லை தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும்.மயங்க் அகர்வால் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்று நிரூபித்துவிட்டார். மேலும் அவர் மூன்று ஒருநாள் போட்டியில் விளையாடி விளையாடி உள்ளார். இதனால் அவரை வெளியேற்ற முடியாது .

ஷுப்மான் கில் வாய்ப்பு அளிக்கும் போது சிறப்பாக விளையாடுவர். மயங்க் அகர்வால் மற்றும் ஷுப்மான் கில் தொடக்க வீரர்களாக களம் இறங்க வேண்டும்.மேலும் ஷுப்மான் கில் நியூசிலாந்து 'ஏ' அணிக்கு எதிரான முதல் போட்டியில் மிடில் ஆர்டரில் விளையாடி இரட்டை சதம் அடித்தார். பின்னர் இரண்டாவது போட்டியில் தொடக்க வீரராக விளையாடிய போது சதம் அடித்தார்.

இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறினார்.

Next Story