Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்தியா ஹாக்கி அணி தரவரிசை பட்டியலில் டாப் 5 இடத்திற்குள் முன்னேறியது!

இந்தியா ஹாக்கி அணி தரவரிசை பட்டியலில் டாப் 5 இடத்திற்குள் முன்னேறியது!

Vignesh KBy : Vignesh K

  |  3 March 2020 6:21 AM GMT

கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் சர்வதேச ஹாக்கி கவுன்சில் சார்பில் சிறந்த அணிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. தற்போது 2020ஆம் ஆண்டு ஜனவரிக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது சர்வதேச ஹாக்கி கவுன்சில்.

இதில் முதன் முறையாக இந்தியா ஆண்கள் அணி 4-வது இடத்திற்கு முன்னேறியது. இதற்கு முன்பு 5-வது இடத்தில் அதிகமாக இருந்தது. தற்போது நடந்து கொண்டிருக்கும் ஹாக்கி புரோ லீக் தொடரில் முதல் மூன்று சுற்றில் இந்தியா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தன் மூலம் இந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

முதல் இடத்தில் பெல்ஜியம் அணி, இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா அணி, மூன்றாவது இடத்தில் நெதர்லாந்து அணி, ஐந்தாவது இடத்தில் அர்ஜென்டினா அணி உள்ளது.

மேலும் இந்தியா பெண்கள் அணி 9-வது இடத்தில் உள்ளது.

Next Story