Top
undefined
Begin typing your search above and press return to search.

2021 கிரிக்கெட் உலக கோப்பைக்கு இந்திய பெண்கள் அணி தகுதி!

2021 கிரிக்கெட் உலக கோப்பைக்கு இந்திய பெண்கள் அணி தகுதி!

Vignesh KBy : Vignesh K

  |  17 April 2020 6:31 AM GMT

ஐசிசி பெண்களுக்காக ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கான சுற்று ஆட்டங்களில் சில ஆட்டங்கள் முடிந்து விட்டது.

இந்தியா பாகிஸ்தான் இடையே சென்ற ஆண்டு போட்டி நடைபெற வேண்டியது. ஆனால் இந்திய அரசு அனுமதி கொடுக்கவில்லை. அதன் பின்னர் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து நாடுகளுக்கு சென்று விளையாட இருந்தது.

ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக போட்டிகள் நடைபெறவில்லை. இதன் புள்ளிகளை அனைவருக்கும் சமமாகப் வழங்கியது. மேலும் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட இந்திய பெண்கள் அணி தகுதி பெற்றுள்ளது.

முதலிடத்தில் ஆஸ்திரேலியா, இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து, மூன்றாவது இடத்தில் தென்னாபிரிக்கா, நான்காவது இடத்தில் இந்தியா ஆகிய அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டியை நடத்தும் நியூசிலாந்து அணியும் தகுதி பெற்றது. மீதி உள்ள மூன்று இடங்களுக்கு தகுதி சுற்று இங்கிலாந்து ஜூலை மாதம் நடைபெற உள்ளது.

Next Story