Top
undefined
Begin typing your search above and press return to search.

கொரோனா: ₹7 லட்சம் நிதி வசூல் செய்த இந்தியா பெண்கள் ஹாக்கி அணி!

கொரோனா: ₹7 லட்சம் நிதி வசூல் செய்த இந்தியா பெண்கள் ஹாக்கி அணி!

Vignesh KBy : Vignesh K

  |  22 April 2020 11:26 AM GMT

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கால் ஏழை மக்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய வசதி அளிக்க நிதி வசூல் செய்வதற்கு இந்திய பெண்கள் ஆக்கி அணியினர் ஆன்லைன் மூலம் உடல் தகுதி சவால்கள் மேற்கொண்டனர்.

இதன் மூலம் வீராங்கனைகள் கொடுக்கும் உடல் தகுதி சவாலை ஏற்று செய்யும் ரசிகர்கள் நன்கொடை அளிக்க வேண்டும். 18 நாட்கள் நடைபெறும் இந்த சவாலில் முதல் நான்கு நாட்களில் 7 லட்சம் நிதி வசூலிக்கப்பட்டுள்ளது.

இதனைப்பற்றி இந்திய பெண்கள் அணி வீராங்கனை சுஷிலா சானு கூறுகையில்: கொரோனா வைரஸ் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்யும் வகையில் நாங்கள் இந்த உடல் தகுதி சவால் மூலம் நிதி வசூலிக்க நினைத்தோம். அதற்கு மிகப்பெரிய ஆதரவும் கிடைத்தது என்றார்.

Next Story