Top
undefined
Begin typing your search above and press return to search.

ஆசிய மல்யுத்தம் இறுதி போட்டிக்கு முன்னேறினார் - இந்தியா வீரர் சுனில் குமார்!

ஆசிய மல்யுத்தம் இறுதி போட்டிக்கு முன்னேறினார் - இந்தியா வீரர் சுனில் குமார்!

Vignesh KBy : Vignesh K

  |  19 Feb 2020 5:26 AM GMT

ஆசிய மல்யுத்த சாம்பியன்‌ஷிப் போட்டியில் இந்தியா வீரர் சுனில் குமார், கஜகஸ்தான் வீரர் அஜாமத் குஸ்துபயேவை 12-8 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

ஆசிய மல்யுத்த சாம்பியன்‌ஷிப் போட்டி நேற்று டெல்லியில் ஆரம்பித்தது. அந்த போட்டியில் 55 கிலோ உடல் எடைப்பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா வீரர் அர்ஜூன் ஹலாகுர்கி 7-4 என்ற புள்ளி கணக்கில் தென்கொரியாவின் டோங்யோக் வானை வீழ்த்தினர்.

மேலும் 87 கிலோ எடைப்பிரிவு அரை இறுதி போட்டியில் இந்தியா வீரர் சுனில் குமார், கஜகஸ்தான் வீரர் அஜாமத் குஸ்துபயேவைவீழ்த்தினர். அதில் 1-8 என்ற கணக்கில் பின்னர் இருந்த சுனில் குமார் கடைசி கட்டத்தில் அபாரமாக விளையாடி 12-8 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார்.




மேலும் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். சென்ற வருடம் நடந்த ஆசிய மல்யுத்த போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். அவர் தொடர்ந்து 2-வது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

Next Story