Top
undefined
Begin typing your search above and press return to search.

#IPL - ராஜஸ்தானை வீழ்த்தி மீண்டும் முதல் இடம் பிடித்த டெல்லி!

#IPL - ராஜஸ்தானை வீழ்த்தி மீண்டும் முதல் இடம் பிடித்த டெல்லி!

Pravin KumarBy : Pravin Kumar

  |  15 Oct 2020 8:30 AM GMT

ஐபிஎல் டி-20 லீக் தொடரின் 30வது லீக் போட்டி துபாய் இன்டேர்னேஷ்னல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. டெல்லி அணியை பொறுத்த வரையில் ஏழு போட்டிகளில் ஐந்து போட்டிகள் வெற்றி பெற்று வலுவான நிலையில் உள்ளது. ஆனால் ராஜஸ்தான் அணி ஏழு போட்டிகளில் மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில் முதலில் களம் இறங்கிய டெல்லி அணியில் தொடக்க வீரர் ப்ரித்திவ் ஷா டக் அவுட் ஆக ஷிகர் தவண் அற்பதமான ஆட்டத்தை வெளிபடுத்தி அரைசதம் வீளாசினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 53 ரன்கள் அடித்தார். அதன் பின்னர் களம் இறங்கிய ஸ்டோனிஸ் 18 ரன்களும் அலேக்ஸ் கேரி 14 ரன்களும் அடிக்க டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 161 ரன்கள் சேர்த்தது.

பின்னர் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்கம் அதிரடியாக இருந்தாலும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து சொதப்பினர். தொடக்க வீரரான பென் ஸ்டோக்ஸ் மட்டும் 41 ரன்கள் அடிக்க மற்ற வீரர்கள் சொதப்பினர். சாம்சன் 25 ரன்களும் உத்தாப்பா 32 ரன்களும் அடித்தனர். பந்து வீச்சில் ஆன்ரோ நோக்கியா சிறப்பான பந்து வீச்சை வெளிபடுத்தினார்.

அதனை தொடர்ந்து கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்பு இருந்த நிலையில் அவரும் கைவிட டெல்லி அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Next Story