Top
undefined
Begin typing your search above and press return to search.

ஜூலைக்கு தள்ளி வைக்கப்படுகிறதா ஐ.பி.எல் - அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஜூலைக்கு தள்ளி வைக்கப்படுகிறதா ஐ.பி.எல் - அதிர்ச்சியில் ரசிகர்கள்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 March 2020 4:34 AM GMT

இம்மாத இறுதியில் 13வது ஐபில் போட்டிகள் துவங்கவிருந்த நிலையில் தான் கோரானா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 15க்கு தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்திருந்தது. ஆனால் இன்னும் கோரனாவுக்கு மருந்தோ தடுப்பு மருந்தோ முழுமையாக பயன்பாட்டுக்கு வராத நிலையில் ஏப்ரல் 15ம் தேதியும் ஐபிஎல் போட்டிகள் துவங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனை தொடர்ந்து இதை பற்றி தொடர் விவாதத்தில் ஈடுபட்டு வரும் பிசிசிஐ ஏப்ரல் - மே மாதங்களில் 5 தேதிகளை உத்தேச தேதிகளாக தீர்மானித்துள்ளதாம். ஒரு வேளை அந்த தேதியிலும் போட்டி ஆரம்பிக்க முடியாத சூழ ஏற்பட்டால் ஜூலை மாத இறுதியில் துவங்கி - செப்டம்பர் முதல் வாரம் வரை ஐபிஎல் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாம்.

அந்த காலகட்டத்தில் ஆசியா கோப்பை மற்றும் பாகிஸ்தான் - இங்கிலாந்து சுற்றுபயணம் மட்டுமே இருப்பதால் மற்ற நாட்டு வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என பிசிசிஐ கருதுகிறதாம்.

Next Story