Top
undefined
Begin typing your search above and press return to search.

ஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னை அணி அசத்தல் வெற்றி!

ஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னை அணி அசத்தல் வெற்றி!

Vignesh KBy : Vignesh K

  |  17 Feb 2020 12:22 PM GMT

ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. அதில் 10 அணிகள் விளையாடும்.

நேற்று கோல்கட்டாவில் நடந்த லீக் ஆட்டத்தில் கோல்கட்டா அணியை வீழ்த்தி சென்னை அணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது. ஆனால் கோல்கட்டா அணி அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

ஆட்டம் துவக்கத்திலேயே சென்னை அணி ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடினர். சென்னை அணியின் முதல் கோலை கிரிவெல்லாரோ அடித்தார். ஆட்டத்தின் 40வது நிமிடத்தில் செம்ப்ரி இரண்டாவது கோலை பதிவு செய்தார். பதிலடியாக கோல்கட்டா அணி அடுத்த நிமிடமே கோல் அடித்தனர். மேலும் முதல் பாதியில் 2-1 கோல் கணக்கில் சென்னை அணி முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியில் சென்னை அணியின் வால்ஸ்கிஸ் மூன்றாவது கோலை அடித்தார். சென்னை அணி 3–1 என்ற கோல் கணக்கில் வென்றது. புள்ளிப்பட்டியலில், சென்னை அணி 5வது இடத்திற்கு முன்னேறியது. அரை இறுதி வாய்ப்பை பெற்றது.

Next Story