Top
undefined
Begin typing your search above and press return to search.

டிராவிட், சச்சின் சார் சொன்னதை நான் பின்பற்றுகிறேன் - இளம் புயல் ஜெய்ஸ்வால்!

டிராவிட், சச்சின் சார் சொன்னதை நான் பின்பற்றுகிறேன் - இளம் புயல் ஜெய்ஸ்வால்!

Vignesh KBy : Vignesh K

  |  19 Feb 2020 7:04 AM GMT

தென்ஆப்பிரிக்காவில் நடந்த U19 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியா - வங்காளேதேசம் அணிகள் மோதின. அதில் வங்காளேதேசம் அணி வெற்றி பெற்றது. இறுதியில் வங்காளேதேசம் வீரர்கள் மற்றும் இந்தியா வீரர்கள் வாய் வார்த்தைகளில் மோதி கொண்டன. ஆனால் அப்போது ஜெய்ஸ்வால் அமைதியாக இருந்தார்.

இதனால் சில வீரர்களை ஐ.சி.சி எச்சரித்தது.

அந்த போட்டியில் இந்தியா அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வாலை வங்காளதேசம் அணியின் பந்து வீச்சாளர்கள் அதிக அளவில் சீண்டினர். ஜெய்ஸ்வால் அதற்கு எதும் கருத்து தெரிவிக்காமல் அதற்கு பதிலடியாக பேட்டிங்கில் அவரின் திறமையை காட்டினார்.அப்போட்டியில் 88 ரன்கள் எடுத்தார்.

இதுகுறித்து ஜெய்ஸ்வால் கூறியது:

நான் அமைதியாக இருந்தது காரணம் ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் தெண்டுல்கர் சார்தான். யார் என்ன சொன்னாலும் திருப்பி கருத்து தெரிவிக்காமல் அதற்கு பதிலடியாக பேட்டிங்கில் நம்பளுடைய திறமையை கட்டவேண்டும். இவர்களுடைய வார்த்தையை தான் நான் பெரிதாக வைத்திருக்கிறேன்.


அதனால்தான் இறுதி போட்டியில் எதுவும் பேசாமல் நீண்ட நேரம் பேட்டிங் செய்து, ரன்களை உயர்த்த வேண்டும் என்று நினைத்தேன்.

இவ்வாறு ஜெய்ஸ்வால் கூறினார்.

Next Story