Top
undefined
Begin typing your search above and press return to search.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் கடலூர் அணி வெண்கலப்பதக்கம் வென்றது!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  நடைபெற்ற கால்பந்து போட்டியில் கடலூர் அணி வெண்கலப்பதக்கம் வென்றது!

Vignesh KBy : Vignesh K

  |  21 Feb 2020 6:29 AM GMT

பள்ளிக்கல்வி துறை நடத்தும் 2019 - 2020ஆம் ஆண்டிற்கான 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு மாநில அளவிலான கால்பந்து போட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்றது.

இந்த போட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டத்தில் உள்ள அதியமான் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் 32 மாவட்டத்தை சேர்ந்த அணிகள் பங்கு பெற்றன. இதில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஏ.ஆர்.எல்.எம் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு வெண்கலப்பதக்கம் வென்றனர் .



முதல் சுற்று ஆட்டத்தில் கடலூர் ஏ.ஆர்.எல்.எம் அணி தஞ்சை டான்போஸ்கோ அணியை மோதியது. அதில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. அடுத்து இரண்டாம் சுற்றில் திருப்பூர் அணியை எதிர்கொண்டு 1-0 என்ற கோல் கணக்கில் வென்று கால் இறுதி போட்டிற்கு முன்னேறியது.

கால் இறுதி போட்டியில் ஏ.ஆர்.எல்.எம் அணி காஞ்சிபுரம் அணியுடன் மோதிது. அதில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறியது.

அரை இறுதில் கடலூர் ஏ.ஆர்.எல்.எம் அணி நெய்வேலி எஸ்.டி.ஏ.டி அணியுடன் மோதியது. அதில் 1-2 என்ற கோல் கணக்கில் போராடி தோல்வி அடைந்தது .



அதன் பிறகு வெண்கலப்பதக்கதிற்கான போட்டியில் திண்டுக்கல் சென்மேரிஸ் அணியுடன் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.

Next Story