Top
undefined
Begin typing your search above and press return to search.

உசைன் போல்டுடன் ஒப்பிடப்படும் கர்நாடக கம்பலா வீரர் ! உதவிக்கரம் நீட்டிய மத்திய அரசு

உசைன் போல்டின் 100 மீட்டர் சாதனையையுடன் கர்நாடக கம்பலா வீரர் ஸ்ரீனிவாச கவ்டாவின் கம்பலா சாதனை ஒப்பிடப்படுகிறது. அவரை மேலும் பயிற்றுவிக்க மத்திய அரசு முன்வந்துள்ளது. நாடு முழுவதும் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.

உசைன் போல்டுடன் ஒப்பிடப்படும் கர்நாடக கம்பலா வீரர் ! உதவிக்கரம் நீட்டிய மத்திய அரசுPicture Courtesy : ANI

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  15 Feb 2020 12:45 PM GMT

தமிழகத்தில் எப்படி ஜல்லிகட்டோ அதே போல், கர்நாடகத்திற்கு கம்பலா. கம்பலா என்பது கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய வீர விளையாட்டு. கம்பலா எனப்படுவது, எருமை மாடுகளை கட்டிக்கொண்டு சேறு நிறைந்த விவசாய மண்ணில் ஓட வேண்டும். இந்த விளையாட்டில் பங்குபெறும் வீரர்கள் இயற்கையாகவே வலிமை உள்ளவர்களாகத் தான் இருப்பார்கள்.

அந்த வகையில், எருமை மாட்டை கட்டிக்கொண்டு ஓடும் போட்டியில், ஸ்ரீனிவாச கவுடா என்ற வீரர், உசைன் போல்ட் ஒடுவதை விட வேகமாக ஓடியுள்ளார் என்று கூறப்படுகிறது. 142.5 மீட்டர் தூரத்தை 13.62 வினாடிகளில் ஓடி முடித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் கதிரி என்ற ஊரில் நடந்த போட்டியில் இந்த சாகசத்தை புரிந்துள்ளார் ஸ்ரீனிவாச கவ்டா. இது குறித்து அவர் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "என்னையும் உசைன் போல்டையும் மக்கள் ஒப்பிட்டு பார்க்கின்றனர். அவரோ உலக சாம்பியன், ஆனால் நானோ சேற்று மண்ணில் ஓடுகிறேன்", என்று கூறியுள்ளார்.

இதனை அடுத்து அவருக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பதிவிட்ட ட்விட்டர் பதிவில், "ஸ்ரீனிவாச கவ்டாவிற்கு 100 மீட்டர் ஓட்டப்பந்தையம் ஓட பயிற்சி அளிக்கப்பட வேண்டும் அல்லது கம்பலா-வை ஒலிம்பிக் விளையாட்டாக ஆக்க வேண்டும். எவ்வாராயினும், ஸ்ரீனிவாச கவ்டாவுற்கு தங்கப்பதக்கம் கிடைக்க வேண்டும்", என்று பதிவிட்டார். இதனை தொடர்ந்து, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரெஜுஜு ஏ.என்.ஐ செய்திகளிடம் கூறுகையில், "ஸ்ரீனிவாச கவ்டா- விற்கு நாட்டின் தலை சிறந்த பயிற்சியாளர்களை வைத்து பயிற்சி அளிக்கப்படும்", என்று கூறியுள்ளார்.

Sports Authority of India (S.A.I)- வை சேர்ந்தவர்கள் ஸ்ரீனிவாச கவ்டாவை தொடர்பு கொண்டு, அவருக்கு ரயில் டிக்கெட்டை பதிவு செய்துள்ளனர். திங்கள்கிழமை அன்று அவர் S.A.I மையத்தை வந்து அடைவார் என்றும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரெஜுஜு தெரிவித்துள்ளார்.

ஸ்ரீனிவாச கவ்டா - வை மேலும் பயிற்றுவிக்க மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Select Inputs from ANI

Next Story