Top
undefined
Begin typing your search above and press return to search.

விளையாட்டு உலகின் மிக பெரிய லாரியஸ் விருதை தட்டிச்சென்றார் - God of Cricket சச்சின் டெண்டுல்கர்!

விளையாட்டு உலகின் மிக பெரிய லாரியஸ் விருதை தட்டிச்சென்றார் - God of Cricket சச்சின் டெண்டுல்கர்!

Vignesh KBy : Vignesh K

  |  18 Feb 2020 5:49 AM GMT

விளையாட்டு துறையில் சிறந்த வீரர்களுக்கு ஆண்டுதோறும் லாரியஸ் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருது விளையாட்டு துறையில் மிக பெரிய விருது என கூறப்படுகிறது. 2019- ஆம் ஆண்டுக்கான லாரியஸ் விருது வழங்கும் விழா ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்றது.

இந்த விருது கால்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், ரக்பி, கூடைப்பந்து, கிரிக்கெட் மற்றும் விளையாட்டு துறையில் இருக்கும் அனைத்து விளையாட்டு போட்டியில் விளங்கிய சிறந்த வீரர்களுக்கும் தரப்படும்.

கடந்த 20 ஆண்டுகளில் விளையாட்டு உலகில் சிறந்த தருணமாக அமைந்தது. 2011ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதி போட்டியில் வென்ற பின் இந்தியா கிரிக்கெட் அணியின் சச்சின் டெண்டுல்கரை வீரர்களின் தோளில் சுமந்து சென்ற நிகழ்வு அதிக வாக்குகள் பெற்று தேர்வானது.


இதனால் சச்சின் டெண்டுல்கருக்கு லாரியஸ் விருதை வழங்கப்பட்டது. இந்த விருதை ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் வாக் வழங்கினார்.

Next Story