Top
undefined
Begin typing your search above and press return to search.

#Breaking: கிரிக்கெட் வீரர் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு!

#Breaking: கிரிக்கெட் வீரர் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு!

MuruganandhamBy : Muruganandham

  |  15 Aug 2020 2:44 PM GMT

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் தற்போது ஐபிஎல் போட்டிக்காக தயார் ஆகி வருகிறது. அடுத்த மாதம் ஐபிஎல் போட்டிகள் நடக்க உள்ளது. இந்த நிலையில் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார் தோனி. ஏற்கெனவே, டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகிய நிலையில், சர்வதேச போட்டிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இரவு 7.29 மணியிலிருந்து, ஓய்வுபெறுவதாக, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறிய அவர், கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற நாள் முதலான தனது புகைப்படங்களை வீடியோ வடிவில் வெளியிட்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

2011ல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் பெற காரணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story