Top
undefined
Begin typing your search above and press return to search.

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி: மார்ச் 2-ஆம் தேதி சேப்பாக்கத்தில் பயிற்சியை தொடங்கும் - எம்.எஸ்.டோனி!

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி: மார்ச் 2-ஆம் தேதி சேப்பாக்கத்தில் பயிற்சியை தொடங்கும் - எம்.எஸ்.டோனி!

Vignesh KBy : Vignesh K

  |  26 Feb 2020 6:17 AM GMT

இந்த வருடத்தின் ஐ.பி.எல் போட்டி அடுத்த மாதம் 29ஆம் தேதி ஆரம்பமாகிறது. முதல் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. அந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகிறது.

இந்த போட்டிற்கு தயாராகும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி மார்ச் 2-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை தொடங்கிறார்.

மார்ச் 19-ஆம் ஆரம்பிக்கும் பயிற்சிக்கு அனைத்து வீரர்களும் அணியுடன் இணைந்து விளையாடுவார்கள் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் தெரிவித்தார்.

டோனி இரண்டு வாரங்கள் பயிற்சியில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது. இதற்கு முன்பே சுரேஷ் ரெய்னாவும், அம்பத்தி ராயுடு 3 வாரங்களாக பயிற்சியில் உள்ளனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் அரை இறுதி போட்டியில் தான் கடைசியாக எம்.எஸ் டோனி இந்தியா அணியில் விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story