Top
undefined
Begin typing your search above and press return to search.

மெக்சிகோ ஓபன்: அரை இறுதி போட்டிக்கு முன்னேறினார் - டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால்!

மெக்சிகோ ஓபன்:  அரை இறுதி போட்டிக்கு முன்னேறினார் - டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால்!

Vignesh KBy : Vignesh K

  |  28 Feb 2020 12:11 PM GMT

ஸ்பெயின் நாட்டின் சிறந்த டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால். இவர் மெக்சிகோ ஓபனில் அரை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

மெக்சிகோ ஓபன் டென்னிஸ் தற்போது அகாபுல்கோ-வில் நடந்து வருகிறது. இதன் கால் இறுதி போட்டியில் ஸ்பெயின் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால் தென்கொரியா வீரர் வொன் சூன்-வூவை எதிர்கொண்டார். இதில் ரஃபேல் நடால் 6-2, 6-1 என்ற புள்ளி கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அரை இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

ரஃபேல் நடால் சென்ற மாதம் ஆஸ்திரேலியாவில் நடந்த ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியின் கால் இறுதி ஆட்டத்தில் வெளியேறினார். அதன் பிறகு மெக்சிகோ ஓபன் தொடர் தான் முதல் போட்டியாகும்.

Next Story