Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்தியா பெண்ணை திருமணம் செய்கிறார் - ஆஸ்திரேலியா அதிரடி பேட்ஸ்மேன் கிளென் மாக்சுவெல்!

இந்தியா பெண்ணை திருமணம் செய்கிறார் - ஆஸ்திரேலியா  அதிரடி பேட்ஸ்மேன் கிளென் மாக்சுவெல்!

Vignesh KBy : Vignesh K

  |  27 Feb 2020 5:42 AM GMT

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிளென் மாக்சுவெல். இந்தியா வம்சாவளியை சேர்ந்த வினிராமன் என்ற பெண்ணை காதல் செய்தார் கிளென் மாக்சுவெல் . இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதல் செய்து பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துள்ளனர்.

இந்த தருணத்தில் கடந்த வாரம் நாம் திருமணம் செய்து கொள்ளலாமா என வினிராமனை கேட்டுள்ளார் கிளென் மாக்சுவெல். அதற்கு அவர் "ஓகே" என கூறினார் . இதை தொடர்ந்து இருவரும் மோதிரம் மாற்றி கொண்டு திருமண நிச்சியதார்தத்தை முடித்து கொண்டனர் . இந்த செய்தியை மாக்சுவெல் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.


வினிராமனின் வயது 27 அவரின் பெற்றோர் தென்இந்தியாவை சேர்ந்தவர்கள். ஆனால் வினிராமன் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே ஆஸ்திரேலியாவில் தான். அவர் மெல்போர்னில் மருந்தாளுனர் படிப்பை படித்தவர்.

Next Story