Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்தியா பந்து வீச்சாளர்கள் மீது கிளென் மெக்ராத் நம்பிக்கை!

இந்தியா பந்து வீச்சாளர்கள் மீது கிளென் மெக்ராத் நம்பிக்கை!

Vignesh KBy : Vignesh K

  |  27 Feb 2020 4:38 AM GMT

வெலிங்டனில் நடந்த நியூசிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் பந்து வீச்சாளர்களின் பந்து பெரிய அளவில் எடுபடவில்லை.

இந்தியா பந்து வீச்சாளர்களின் மீது வைத்துள்ள நம்பிக்கையை ஒரேநாளில் இழந்து விட வேண்டாம் என ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத் தெரிவித்துள்ளார்.

இதனை குறித்து அவர் கூறுகையில்: ''இந்தியா பந்து வீச்சாளர்களின் மீது நான் முழு நம்பிக்கை வைத்துள்ளேன். நியூசிலாந்து போட்டிக்கு முன்பு அவர்களின் பந்து விச்சு சிறப்பாக இருந்தது.தற்போது சில வீரர்கள் காயம் அடைந்தனர். இஷாந்த் சர்மா காயத்தில் இருந்து திரும்பி முதல் தொடரிலேயே ஐந்து விக்கெட் வீழ்த்தினார். பும்ரா காயத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்தியாவின் பந்து வீச்சு யுனிட் உலகத்தரம் வாய்ந்தது. எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. பந்து வீச்சில் ஒரு பிரச்சினையும் இல்லை நானும் ஏதும் இருப்பதாக நான் பார்க்கவில்லை. இந்தியா பந்து வீச்சாளர்களின் மீது வைத்துள்ள நம்பிக்கையை ஒரேநாளில் இழந்து விட வேண்டாம்.


இஷாந்த் சர்மா தற்போது சிறப்பான பந்தை வீசிக்கிறார். சர்வதேச அளவில் சிறப்பாக உள்ளார்.

இவ்வாறு கிளென் மெக்ராத் கூறினார்.

Next Story