Top
undefined
Begin typing your search above and press return to search.

பெண்கள் உலக கோப்பை: இறுதி போட்டியில் விளையாடும் மனைவியின் ஆட்டத்தை பார்க்க ஆஸ்திரேலியா செல்கிறார் - மிட்செல் ஸ்டார்க் ஸ்டார்க்!

பெண்கள் உலக கோப்பை: இறுதி போட்டியில் விளையாடும் மனைவியின் ஆட்டத்தை பார்க்க ஆஸ்திரேலியா செல்கிறார் - மிட்செல் ஸ்டார்க் ஸ்டார்க்!

Vignesh KBy : Vignesh K

  |  6 March 2020 12:06 PM GMT

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 போட்டியில் 2-1 என்ற புள்ளி கணக்கில் ஆஸ்திரேலியா அணி வென்றது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா முன்னிலையில் உள்ளது. ஆஸ்திரேலியா அணி இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. மூன்றாவது போட்டி நாளை நடக்கிறது.

இதற்கு இடையே ஆஸ்திரேலியாவில் பெண்கள் டி20 உலக கோப்பை இறுதி போட்டி நடக்கிறது. அதில் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் மோதுகிறது. இந்த போட்டி மார்ச் 8 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறுகிறது.

ஆஸ்திரேலியா பெண்கள் அணியின் விக்கெட் கீப்பரும், தொடக்க வீராங்கனையாக களம் இறங்கும் அலீசா ஹீலி இவர் ஆஸ்திரேலியா ஆண்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் மனைவி.

இதற்காக அணி நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு மனைவின் ஆட்டத்தை பார்க்க தென்னாப்பிரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியா செல்கிறார் மிட்செல் ஸ்டார்க்.

Next Story