Top
undefined
Begin typing your search above and press return to search.

புடவை கட்டிக்கொண்டு கிரிக்கெட் விளையாடும் இந்தியா வீராங்கனை! வைரல் விடியோ!

புடவை கட்டிக்கொண்டு கிரிக்கெட் விளையாடும் இந்தியா வீராங்கனை! வைரல் விடியோ!

Vignesh KBy : Vignesh K

  |  5 March 2020 1:38 PM GMT

இந்தியா பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ். இவர் 200 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வீராங்கனை மற்றும் ஒருநாள் போட்டிகளில் 6000 ரன்களை அடித்தவர். மேலும் 2003ஆம் ஆண்டு அர்ஜுன விருது பெற்றவர்.2015ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது. சென்ற வருடம் டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் அவர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை போட்டிக்காக அதிரடியாக தயாராகி வருகிறார்.

இந்த தருணத்தில் வியாழன்கிழமை அன்று மித்தாலி ராஜ் புடவை கட்டிக்கொண்டு கிரிக்கெட் விளையாடிய விடியோ சமூகவலையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த விடியோவில் அவர் இந்தியாவின் பாரம்பரிய உடையான புடைவை கட்டிக்கொண்டு, கிரிக்கெட் உபகரணங்களுடன் ஸ்டேடியத்தில் கிரிக்கெட் விளையாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. தற்போது இந்தியா பெண்கள் அணி டி20 உலக கோப்பாய் போட்டி விளையாடி வருகிறது அதற்கு இவர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ மகளிர் தினத்தினை முன்னிட்டு வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

பெண்களுக்கு நம்பிக்கை தரும் அளவில் இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

.

Next Story