Top
undefined
Begin typing your search above and press return to search.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியதை திறந்து வைக்கும் - அமெரிக்க அதிபர்!

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியதை திறந்து வைக்கும் - அமெரிக்க அதிபர்!

Vignesh KBy : Vignesh K

  |  18 Feb 2020 6:22 AM GMT

குஜராத் மாநிலத்தில் உள்ள மோடேராவில் 1982-ஆம் ஆண்டு சர்தார் பட்டேல் கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டது. அந்த ஸ்டேடியத்தில் இதுவரை 12 டெஸ்ட் மற்றும் 24 ஒருநாள் போட்டிகள் போட்டிகள் நடந்துள்ளது.

அந்த ஸ்டேடியதை சென்ற வருடம் இடித்து 63 ஏக்கர் பரப்பளவில் புதிய ஸ்டேடியதை கட்டும் பணி துவங்கப்பட்டது. தற்போது அணி பணி முடியடைத்து வரும் 24-ஆம் தேதி அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி இணைந்து அந்த ஸ்டேடியத்தை திறந்து வைக்கிறார்கள்.


இதன் திறப்பு விழாவுக்கு 1,500 பேருந்துகளில் மக்களை அழைத்து ஸ்டேடியத்தில் அமர வைக்கும் ஏற்பாடுகள் நடந்தது வருகின்றன.

இந்த ஸ்டேடியதை 700 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ளது அதில் 1,10,000 ரசிகர்கள் அமர முடியும். இது தான் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமாக இருக்கும் என கருதப்படுகிறது.

தற்போது உலகின் மிக பெரிய ஸ்டேடியமாக இருக்கும் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் ஸ்டேடியம் தான். ஆனால் அதில் ஸ்டேடியத்தில் 90,000 ரசிகர்கள் அமர முடியும்.

இந்த மோடேரா ஸ்டேடியத்தில் கிரிக்கெட் போட்டிகள் மார்ச் மாதம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story