Top
undefined
Begin typing your search above and press return to search.

விவசாயம் செய்யும் எம்.எஸ்.டோனி! வைரல் வீடியோ!

விவசாயம் செய்யும் எம்.எஸ்.டோனி! வைரல் வீடியோ!

Vignesh KBy : Vignesh K

  |  29 Feb 2020 5:04 AM GMT

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் இயற்கை முறையில் தர்ப்பூசணி பயிர் விதைகளை விதைக்கும் இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி. மற்றும் விவசாயத்தில் கால்பதித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி. இவருக்கு 38 வயது ஆகிறது.இவர் சென்ற வருடம் உலக கோப்பை போட்டியில் தான் கடைசியாக விளையாடினர்.அதன் பிறகு எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் விளையாடவில்லை. தற்போது மார்ச் மாதம் கடைசியில் ஐ.பி.எல். போட்டி துவங்கவுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன். இவர் அந்த போட்டிக்கு மார்ச் மாதம் பயிற்சியை துவங்குவர் என கூறப்படுகிறது.

தற்போது அவர் ஓய்வில் உள்ளார். அந்த நேரத்தில் டோனி வித்தியாசமாக எதையாவது செய்து ரசிகர்களை கவர்ந்து ஈர்க்கிறார். சமீபத்தில் டோனி, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மைதானத்தில் ரோலர் எந்திரத்தை ஓடினார். அந்த வீடியோ வைரல் ஆனது. இப்போது அவர் விவசாயம் செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது.

Next Story