Top
undefined
Begin typing your search above and press return to search.

ஒருநாள்,டெஸ்ட் ,டி20 ஆகிய மூன்று கிரிக்கெட்டில் 100 போட்டிகளை விளையாடிய முதல் வீரர் - ராஸ் டெய்லர் சாதனை!

ஒருநாள்,டெஸ்ட் ,டி20 ஆகிய மூன்று கிரிக்கெட்டில் 100 போட்டிகளை விளையாடிய முதல் வீரர் - ராஸ் டெய்லர் சாதனை!

Vignesh KBy : Vignesh K

  |  21 Feb 2020 12:30 PM GMT

சர்வதேச அளவிளான ஒருநாள்,டெஸ்ட் ,டி20 ஆகிய மூன்று கிரிக்கெட்டில் 100 போட்டிகளை விளையாடிய முதல் வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார் ராஸ் டெய்லர்.

நியூசிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ராஸ் டெய்லர். இன்று இந்தியாவுக்கு எதிராக விளையாடிய முதல் டெஸ்ட் போட்டி அவருக்கு 100-வது டெஸ்ட் போட்டி ஆகும். மேலும் அவர் 100-வது டெஸ்டில் விளையாடிய 4-வது நியூசிலாந்து வீரர்.

இதற்கு முன்பே டெய்லர் ஒருநாள்,டி20 போட்டிகளில் 100 ஆட்டங்களை விளையாடி உள்ளார். இதன் மூலம் 3 வகையான போட்டிகளில் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி20) 100 ஆட்டங்களை விளையாடிய உலகின் முதல் வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். இதுவரை எவரும் 100 ஆட்டங்களை விளையாட வில்லை.


35 வயதாகும் ராஸ் டெய்லர் சமீபத்தில் இந்தியாவுக்கு விளையாடிய டி20 போட்டி தான் அவருக்கு 100-வது ஆட்டமாகும். தற்போது 100-வது டெஸ்ட் போட்டியும் இந்தியாவுடன் விளையாடி உள்ளார்.

Next Story