Top
undefined
Begin typing your search above and press return to search.

டி20 போட்டியில் தொடர்ந்து ஐந்து முறை 50 ரன்னுக்கு மேல் அடித்து உலக சாதனை படைத்த - நியூசிலாந்து வீராங்கனை!

டி20 போட்டியில் தொடர்ந்து ஐந்து முறை 50 ரன்னுக்கு மேல் அடித்து உலக சாதனை படைத்த - நியூசிலாந்து வீராங்கனை!

Vignesh KBy : Vignesh K

  |  11 Feb 2020 6:09 AM GMT

தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் 65 பந்தில் 105 ரன்கள் விளாசிய நியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் சோபி டிவைன் உலக சாதனைப் படைத்துள்ளார்.

நியூசிலாந்து - தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையே ஐந்து டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று 4-வது போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டனும் மற்றும் தொடக்க வீராங்கனையுமான சோபி டிவைன் 65 பந்தில் 105 ரன்கள் விளாசினார்.

இவரின் ஆட்டத்தால் நியூசிலாந்து பெண்கள் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணி 102 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து அணி 69 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.




இந்த போட்டியில் சதம் அடித்த சோபி டிவைன், டி20 போட்டியில் தொடர்ந்து ஐந்து முறை 50 ரன்னுக்கு மேல் அடித்தவர் என்ற சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு இந்தியா வீராங்கனை மிதலி ராஜ், நியூசிலாந்து வீரர் பிரெண்டன் மெக்கல்லம், வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் ஆகியோர் நான்கு முறை 50 ரன்னுக்கு மேல் அடித்து இருந்தனர். இந்த சாதனையை முறியதித்தார் நியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் சோபி டிவைன்.


Next Story