Top
undefined
Begin typing your search above and press return to search.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்திடம் தோற்றது இந்தியா

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்திடம் தோற்றது இந்தியா

Vignesh KBy : Vignesh K

  |  11 Feb 2020 11:58 AM GMT

இந்தியா கிரிக்கெட் அணி விராட்கோலி தலைமையில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்று விளையாடி வருகிறது. இதில் இந்தியா 20 ஓவர் தொடரை 5 - 0 என்ற கணக்கில் கைப் பற்றி நியூசிலாந்தை 'ஒயிட்வாஷ்' செய்தது.

தற்போது நியூசிலாந்து அணி இந்தியாவை ஒருநாள் போட்டியில் ஒயிட் வாஷ் செய்துள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா முதல் பேட்டிங் செய்து 347 ரன்களை குவித்தது. 348 ரன்கள் இலக்கை நோக்கி பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 48.1 ஓவரில் இலக்கை அடித்து வெற்றி பெற்றது.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் பேட்டிங் செய்து 273 ரன்கள் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய இந்தியா அணி 251 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் ஒருநாள் போட்டி தொடரை கைப்பற்றியது.

மூன்றவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் முதல் பேட்டிங் செய்த இந்தியா அணி 296 ரன்கள் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய நியூசிலாந்து அணி 47.1 ஓவரில் இலக்கை அடித்து இந்தியாவை ஒயிட் வாஷ் செய்தது.

மேலும் முதல் டெஸ்ட் தொடர் வரும் 21ஆம் தேதி தொடங்கவுள்ளது.

Next Story