Top
undefined
Begin typing your search above and press return to search.

ஷபாலி, மந்தனாவுக்கு பந்து வீச போவதில்லை - ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர் பீதி!

ஷபாலி, மந்தனாவுக்கு பந்து வீச போவதில்லை - ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர் பீதி!

Vignesh KBy : Vignesh K

  |  7 March 2020 6:23 AM GMT

ஆஸ்திரேலியாவில் பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. தற்போது இறுதி போட்டியை நெருங்கி விட்டோம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா நேரம் 12.30 பகலில் ஆரம்பிக்கிறது.

இதில் ஆஸ்திரேலியா அணி - இந்தியா அணி மோதுகிறது. மேலும் மழை வந்தால் அடுத்த நாள் ஆட்டம் நடக்கும்.

தற்போது ஆஸ்திரேலியா பெண்கள் அணி வேகப்பந்து வீச்சாளர் மேகன் ஷட் அளித்த ஒரு பேட்டியில் கூறியது:-

இந்தியா அணிக்கு எதிராக விளையாடுவதை நான் வெறுக்கிறேன். என்னுடைய பந்து வீச்சு அவர்களுக்கு எளிதாக இருக்கும். குறிப்பாக இந்தியா தொடக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனாவும், ஷபாலி வர்மாவும் என்னுடைய பந்து வீச்சை அதிரடியாக அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். சமீபத்தில் நடந்த முத்தரப்பு போட்டியில் என்னுடைய பந்து வீச்சில் ஷபாலி அதிரடியான சிக்ஸர்ரை அடித்தார். என்னுடைய பந்து வீச்சில் இது தான் மிக பெரியது.


சில திட்டங்களை அவர்களுக்கு வகுத்துள்ளோம். ஆனால் பவர்-பிளேயில் முதல் 6 ஓவரில் மந்தனா, ஷபாலிக்கு எதிராக நான் பந்து வீசுவது சரியானதாக இருக்காது மற்றும் இறுதி போட்டியில் இந்தியாவை சந்திக்க நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும் என திட்டம் வைத்துள்ளோம்.

இவ்வாறு மேகன் ஷட் கூறினார்.

இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதியது அதில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதில் மேகன் ஷட்டின் வீசிய முதல் ஓவரில் ஷபாலி 4 பவுண்டரிகளை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story