Top
undefined
Begin typing your search above and press return to search.

மெக்சிகோ ஓபன்: இறுதி போட்டிக்கு முன்னேறினார் - டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால்!

மெக்சிகோ ஓபன்: இறுதி போட்டிக்கு முன்னேறினார் - டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால்!

Vignesh KBy : Vignesh K

  |  29 Feb 2020 11:47 AM GMT

ஸ்பெயின் நாட்டின் சிறந்த டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால். இவர் மெக்சிகோ ஓபனில் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

மெக்சிகோ ஓபன் டென்னிஸ் தற்போது அகாபுல்கோ-வில் நடந்து வருகிறது. இதன் அரை இறுதி போட்டியில் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவிடம் மோதினர்.

இதில் ரஃபேல் நடால் 6-3, 6-2 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு அரை இறுதி போட்டியில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் - ஜோன் இஸ்னெருடன் மோதினார். இதில் 2-6, 7-5, 6-3 என்ற புள்ளி கணக்கில் டெய்லர் பிரிட்ஸ் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் இறுதி போட்டியில் ரஃபேல் நடால் - டெய்லர் பிரிட்ஸ் மோதுகிறார்கள்.

Next Story