Top
undefined
Begin typing your search above and press return to search.

14 வயதில் 2 இரட்டை சதம் விளாசிய இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனின் மகன்!

14 வயதில் 2 இரட்டை சதம் விளாசிய இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனின் மகன்!

Vignesh KBy : Vignesh K

  |  19 Feb 2020 10:16 AM GMT

இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சிறந்த வீரர் ராகுல் டிராவிட். அவரை தடுப்பு சுவர் என கூறுவர்.தற்போது அவர் இந்தியா 'ஏ' அணியின் பயிற்சியாளராக இருக்கிறார்.



ராகுல் டிராவிட்டின் மகன் சமித். அவர் பெங்களூரில் உள்ள மல்லையா அதிதி சர்வதேச பள்ளியில் படித்து வருகிறார். தற்போது கர்நாடகா கிரிக்கெட் சங்கம் சார்பில் நடைபெற்ற பி.டி.ஆர். ஷீல்டு 14 வயதுக்கு உட்பட்ட மண்டல கிரிக்கெட் போட்டியில் சமித் இரட்டை சதம் விளாசியுள்ளார்.

200 ரன்கள் அதில் 146 பந்துகளில் 33 பவுண்டரிகள் அடித்துள்ளார். சமித்தின் இரட்டை சதத்தால் அவருடைய அணி 50 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய ஸ்ரீகுமரன் அகாடமி அணி 110 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. சமித் அணி 267 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பேட்டிங்கில் இரட்டை சதம் மற்றும் பந்து வீச்சில் சமித் 2 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

சென்ற மூன்று மாதங்களில் சமித் இரண்டாவது முறையாக இரட்டை சதம் அடித்துள்ளார். டிசம்பர் மாதத்தில் துணை தலைவர் லெவன் அணிக்காக 201 ரன் அடித்துள்ளார்.

Next Story