Top
undefined
Begin typing your search above and press return to search.

ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்கா எதிரான இந்திய அணி!

ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்கா எதிரான  இந்திய அணி!

Vignesh KBy : Vignesh K

  |  9 March 2020 12:52 PM GMT

தென்ஆப்பிரிக்க அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகளை விளையாட உள்ளது. இந்தியாவில் உள்ள தர்மசாலா, லக்னோ மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் போட்டி நடைபெற உள்ளன.

முதல் ஒருநாள் போட்டி வரும் 12-ஆம் தேதி தர்மசாலாவில் உள்ள மைதானத்தில் நடைபெறும். 2வது போட்டி 15ஆம் தேதி லக்னோவில் உள்ள ஏ.பி. வாஜ்பாய் ஏகனா மைதானத்திலும், 3வது ஒருநாள் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில் நடைபெற உள்ளன.

இந்த தருணத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான விளையாடும் இந்தியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் விராட் கோலி தலைமையில் ஷிகர் தவான், ப்ரித்விஷா, கே.எல் ராகுல், மணீஷ் பாண்டே, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர், சாஹல், பும்ரா, நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், சுப்மான் கில் ஆகியோர் இந்தியா அணியில் இடம் பெற்றுள்ளனர்.

Next Story