Top
undefined
Begin typing your search above and press return to search.

மீண்டும் நினைவுகள்: ஒருநாள் போட்டியில் முதல் இரட்டை சதம் அடித்த God of Cricket! உலக சாதனை!

மீண்டும் நினைவுகள்: ஒருநாள் போட்டியில் முதல் இரட்டை சதம் அடித்த God of Cricket! உலக சாதனை!

Vignesh KBy : Vignesh K

  |  25 Feb 2020 4:44 AM GMT

கிரிக்கெட் விளையாட்டில் God of Cricket என்று அழைக்கப்படுவர் சச்சின் டெண்டுல்கர். இவர் ஒருநாள் போட்டியில் தனி ஒருவராக இரட்டை சதம் அடித்து முதல் வீரர் என்ற உலக சாதனை படைத்தார்.

இதற்கு முன்பு ஒருநாள் போட்டியில் தனி ஒருவராக அதிக ரன்கள் 194 இதை பாகிஸ்தானின் சயீத் அன்வர் அடித்தார். இதுவே பட்டியலில் முதலில் இருந்தது. இதற்கு பின்பு தான் சச்சின் அவர்கள் இரட்டை சதம் (200 ரன்கள்) அடித்து அந்த சாதனையை முறியடித்தார்.

சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு நேற்று தினத்தில் (பிப்ரவரி 24, 2010) இது நடந்தது. அந்த போட்டி குவாலியர் ஸ்டேடியத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஒருநாள் போட்டியில் மோதியது. இந்த போட்டியில் தான் சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் (200ரன்கள்) அடித்து அட்டமிழக்காமல் விளையாடி முடித்தார். அவர் 147 பந்துகளில் இரட்டை சதம் (200ரன்கள்) அடித்து சாதனை படைத்தார்.


இதன்மூலம், சர்வதேச கிரிக்கெட் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை சச்சின் டெண்டுல்கர் படைத்தார்.

இதன் பின்னர் இந்தியா வீரர்களான வீரேந்தர் சேவாக் ஒரு இரட்டை சதம் மற்றும் ரோஹித் ஷர்மா மூன்று இரட்டை சதம் அடித்தனர். மேற்கு இந்தியா தீவுகளின் கிறிஸ் கெய்ல், நியூசிலாந்தின் மார்ட்டின் குப்டில் மற்றும் பாகிஸ்தானின் ஃபக்கர் ஜமான் ஆகியோர் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தனர்.

Next Story