Top
undefined
Begin typing your search above and press return to search.

ஐசிசி தரவரிசை: ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டார் - ஜஸ்பிரீத் பும்ரா!

ஐசிசி தரவரிசை: ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டார் - ஜஸ்பிரீத் பும்ரா!

Vignesh KBy : Vignesh K

  |  12 Feb 2020 12:09 PM GMT

இந்தியா கிரிக்கெட் அணி விராட்கோலி தலைமையில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்று விளையாடி வருகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டியில் இந்தியா 3-0 என்ற கணக்கில் தோல்வி அடைத்தது. அந்த மூன்று போட்டியில் ஜஸ்பிரீத் பும்ரா 30 ஓவர் வீசினார் அதில் 167 ரன்கள் கொடுத்தார் ஆனால் ஒரு விக்கெட்டை அவர் எடுக்கவில்லை அதுவே இந்தியா ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

ஜஸ்பிரீத் பும்ரா 2016ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார். இது தான் முதல் முறை ஒரு விக்கெட்டை கூட எடுக்காமல் இருந்தார்.

இந்த ஏமாற்றத்தின் மூலம் ஐ.சி.சி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பந்து வீச்சு தரவரிசையில் முதல் இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டார் ஜஸ்பிரீத் பும்ரா. தற்போது முதல் இடத்தில் டிரென்ட் போல்ட் 727 புள்ளிகள், இரண்டாவது இடத்தில் ஜஸ்பிரீத் பும்ரா 719 புள்ளிகள், மூன்றாவது இடத்தில் முஜீப் உர் ரஹ்மான், ரபடா நான்காவது இடத்தில் மற்றும் ஐந்தாவது இடத்தில் பேட் கம்மின்ஸ் உள்ளனர்.

Next Story