Top
undefined
Begin typing your search above and press return to search.

பெண்கள் டி20 உலக கோப்பை: நாளை அரை இறுதி போட்டி இந்தியா-இங்கிலாந்து, ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகிறது!

பெண்கள் டி20 உலக கோப்பை: நாளை அரை இறுதி போட்டி இந்தியா-இங்கிலாந்து, ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகிறது!

Vignesh KBy : Vignesh K

  |  4 March 2020 8:55 AM GMT

ஆஸ்திரேலியாவில் பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் லீக் போட்டிகள் முடிந்து நாளை அரை இறுதி போட்டி துவங்குகிறது.

இரு அரை இறுதி போட்டி இந்தியா - இங்கிலாந்து, ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகிறது.

இதில் குரூப் ஏ பிரிவில் முதல் இடத்தில் இந்தியா அணியும், இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா அணியும் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. குரூப் பி பிரிவில் முதல் இடத்தில் தென்னாபிரிக்கா அணியும், இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து அணியும் தகுதி பெற்றன.

குரூப் ஏ பிரிவில் உள்ள முதல் அணியும் - குரூப் பி பிரிவில் உள்ள இரண்டாவது அணியும் மோதும்.

குரூப் ஏ பிரிவில் உள்ள இரண்டாவது அணியும் - குரூப் பி பிரிவில் உள்ள முதல் அணியும் மோதும்.

சென்ற 2018 டி20 உலக கோப்பை போட்டியில் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின. அதில் இந்தியா தோல்வியடைந்தது. தற்போதும் இந்தியா-இங்கிலாந்துஅணிகள் மோதுகிறது. இதனால் நாளை நடக்கும் போட்டி பெரும் பரபரப்பை எற்படுத்தும் என கூறப்படுகிறது.

Next Story