Top
undefined
Begin typing your search above and press return to search.

மோடி ஆட்சியில் இருக்கும் வரை இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறாது - சாகித் அஃபிரிடி கருத்து!

மோடி ஆட்சியில் இருக்கும் வரை இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறாது - சாகித் அஃபிரிடி கருத்து!

Vignesh KBy : Vignesh K

  |  25 Feb 2020 9:26 AM GMT

இந்தியாவில் மோடி ஆட்சியில் இருக்கும் வரை, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உறவு நீடிக்காது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சாகித் அஃபிரிடி கூறியுள்ளார்.

பாகிஸ்தான் இணையதளம் ஒன்றில் பேட்டி அளித்தார் அஃபிரிடி. அதில் ஒரு வாசகர் இந்தியா - பாகிஸ்தான் இடையே எப்போது கிரிக்கெட் போட்டி மீண்டும் நடைபெறும் என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அஃபிரிடி இந்தியா பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார். அஃபிரிடி இதை பற்றி கூறுகையில் ''நரேந்திர மோடி ஆட்சியில் இருக்கும் வரை இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்கள் காத்திருக்க ஆக வேண்டும்.


இதே நேரத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உறவு நல்ல நிலையில் இல்லை .

மோடியால் தான் இந்தியா - பாகிஸ்தான் இடையே சச்சரவு ஏற்படுகிறது . மேலும் அவர் ஒருவரால் தான் இந்த அளவுக்கு பிரிந்து இருக்கிறோம் என்றார்.

Next Story