Top
undefined
Begin typing your search above and press return to search.

12-வது வீரராக இவரை பேட்டிங் செய்ய சொன்னாலும் அவரால் சதம் அடிக்க முடியும் - ஷிகர் தவான்!

12-வது வீரராக இவரை பேட்டிங் செய்ய சொன்னாலும் அவரால் சதம் அடிக்க முடியும் - ஷிகர் தவான்!

Vignesh KBy : Vignesh K

  |  13 Feb 2020 10:45 AM GMT

இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஷிகர் தவான் அவர் தற்போது அளித்த பேட்டியில் கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடி வருகிறார். அவரை 12வது இடத்தில் களம் இறக்கினால் கூட சதம் அடிப்பார் என்றார்.

27 வயதான கே.எல்.ராகுல் தற்போது நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் அதிரடியாக விளையாடி வருகிறார்.


அவர் ஒருநாள் போட்டியில் 1 சதம், 1 அரை சதம் அடித்துள்ளார். மேலும் டி20 போட்டியில் 2 அரை சதம் அடித்துள்ளார்.

இதற்கு முன்பு ஆஸ்திரேலியா, மேற்கு இந்தியா தீவு , இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகளுடன் சிறப்பாக ஆடினார். குறைந்த பட்சம் 1 அரை சதம் அடித்துவிடுவார். கே.எல்.ராகுல் தொடக்க வீரர் வரிசையில் அதிரடியாக விளையாடினர்.இதுவே தொடக்கத்தில் களம் இறங்கும் ஷிகர் தவானுக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் ஷிகர் தவன் காயத்தால் அணியில் இருந்து வெளியேறினார். அந்த சந்தர்ப்பத்தை யுபயோகம் படுத்தி கே.எல்.ராகுல் அதிரடியாக ஆடினார்.

ஆனால் ஷிகர் தவான் ஆஸ்திரேலிய போட்டியில் அவருடைய திறமையை பதிவு செய்தார். ஆகவே கே.எல்.ராகுல் 3-வது,4-வது மற்றும் 5-வது வரிசையில் களம் இறங்கி அதிரடியாக செய்யப்பட்டார். மேலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி போட்டியில் 5-வது வரிசையில் களம் இறங்கி சதம் அடித்து சிறப்பாக செயல்பட்டார்.

மேலும் கே.எல்.ராகுல் ஆட்டத்தை தவான் பாராட்டி உள்ளார். இதை பற்றி தவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது:-


நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி போட்டியில் 5-வது வரிசையில் களம் இறங்கி சதம் அடித்து சிறப்பாக செயல்பட்டார்.அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். அவருடைய பேட்டிங் வலிமை மிகவும் நன்றாக இருக்கிறது என்றார்.

இவ்வாறு ஷிகர் தவன் கூறினார்.

Next Story