Top
undefined
Begin typing your search above and press return to search.

டி20 உலகக் கோப்பையை தள்ளிவைத்தால் ஐ.பி.எல் போட்டியை விளையாட தயார் : ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்மித்.!

டி20 உலகக் கோப்பையை தள்ளிவைத்தால் ஐ.பி.எல் போட்டியை விளையாட தயார் : ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்மித்.!

Vignesh KBy : Vignesh K

  |  2 Jun 2020 1:47 PM GMT

அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 15ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் ஏழாவது டி20 உலக கோப்பை போட்டி நடைபெற இருந்தது. கொரோனா வைரஸ் காரணத்தால் இந்தப் போட்டி நடைபெறுமா? என்பது தெரியவில்லை. வரும் 10ஆம் தேதி டெலிகான்பிரின்ஸ் மூலம் ஐ.சி.சி பிரதிநிதிகள் கூட்டத்தில் இப்போட்டி நடத்தலாமா இல்லை தள்ளி வைக்கலாமா என்பதைப் பற்றி முடிவு செய்ய உள்ளது.

அப்படி டி20 போட்டி தள்ளி வைக்கப்பட்டதால் அந்த சமயத்தில் ஐ.பி.எல் போட்டியை நடத்துவதற்கு இந்தியா கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு வருகிறது.

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக ஸ்டீவ் ஸ்மித் நேற்று இவருடைய பயிற்சியைத் தொடங்கினார். ஸ்டீவ் ஸ்மித் ஐ.பி.எல் போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார்.

இவர் அளித்த பேட்டியில் கூறியது: டி20 உலகக் கோப்பை போட்டி தள்ளி வைக்கப்பட்டால் அந்த பட்சத்தில் ஐபிஎல் போட்டி நடைபெற்றால் நான் விளையாட தயாராக உள்ளேன். ஐ.பி.எல் போட்டி சிறப்பாக இருக்கும் எனக் கூறியுள்ளார். தற்போது இருக்கும் சூழ்நிலையில் உலக கோப்பை நடைபெறுமா என்பது தெரியவில்லை. உலகக்கோப்பை பற்றி தனிப்பட்ட முறையில் நான் எதுவும் சிந்திக்கவில்லை. நிபுணர்கள், அரசு கூறும்படி நாங்கள் செயல்படுவோம். மேலும் ஸ்டீவ் ஸ்மித் பல விஷயங்களை அந்த பேட்டியில் பேசியுள்ளார்.

Next Story