Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்தியாவுக்கு மிகச்சிறந்த கேப்டன் டோனி - சுரேஷ் ரெய்னா பாராட்டு!

இந்தியாவுக்கு மிகச்சிறந்த கேப்டன் டோனி - சுரேஷ் ரெய்னா பாராட்டு!

Vignesh KBy : Vignesh K

  |  14 Feb 2020 6:37 AM GMT

2019ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் அரை இறுதி போட்டியில் இந்தியா நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது. அதன் பிறகு இந்தியா அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் முன்னாள் கேப்டன் எம்.எஸ். டோனி எந்த ஒரு சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்க வில்லை.

தற்போது ஐ.பி.எல் போட்டிகள் மார்ச் மதம் கடைசில் துவங்கவுள்ளது. அந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அவர் விளையாட உள்ளார். இந்த அணியில் சுரேஷ் ரெய்னாவும் விளையாட உள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் "தி சூப்பர் கிங்ஸ் நிகழ்ச்சி"யில் கலந்து கொண்டு பேசிய சுரேஷ் ரெய்னா கூறியது:-

எங்கள் அணியால் அனைத்தையும் செய்ய முடியும் என் என்றல் எங்களிடம் இந்தியா அணியின் சிறந்த கேப்டன் இருக்கிறார்.மேலும் இந்தியாவுக்கு கிடைத்த மிகச்சிறந்த கேப்டன் டோனி அவர்கள் தான் .


இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சொந்த மைதானத்தில் விளையாடும் போது அரங்கம் அதிரும். எங்கள் அணிக்கு தான் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். இந்த வருடம் அணியில் நிறைய புதிய திறமைசாலிகள் உள்ளனர். பியூஷ், ஜோஷ் ஹசில்வுட், சாம் குர்ரான், மற்றும் தமிழ்நாடு அணியில் இருந்து சாய் கிஷோர் ஆகியோர் உள்ளனர். சாய் கிஷோர் நல்ல பந்து வீச்சாளர் . எங்கள் அணியில் இளைஞர்கள் மற்றும் மூத்த வீரர்கள் கொண்டகலவை அணியை வைத்துள்ளோம்.

இவ்வாறு சுரேஷ் ரெய்னா கூறினார்.

Next Story