Top
undefined
Begin typing your search above and press return to search.

டி20 தரவரிசை பட்டியலில் கே.எல் ராகுல் 2-வது இடத்திலும் மற்றும் விராட் கோலி 10-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்!

டி20 தரவரிசை பட்டியலில் கே.எல் ராகுல் 2-வது இடத்திலும் மற்றும் விராட் கோலி 10-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்!

Vignesh KBy : Vignesh K

  |  18 Feb 2020 4:15 AM GMT

டி20 கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐ.சி.சி. இந்த பட்டியலில் இந்தியா அணியின் கேப்டன் விராட் கோலி 9-வது இடத்தில் இருந்து 10-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

தற்போது தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து டி20 போட்டி நடைபெற்றது அந்த தொடரில் இங்கிலாந்து வீரர் மோர்கன் சிறப்பாக விளையாடியதால் 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

மேலும் கே.எல் ராகுல் 823 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறார். முதல் இடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 879 புள்ளிகளுடன் இருக்கிறார் மற்றும் ஆரோன் பிஞ்ச் 3-வது இடத்திலும், கொலின் முன்றோ 4-வது இடத்திலும், மேக்ஸ்வெல் 5-வது இடத்தில் உள்ளனர்.

பந்து வீச்சாளர் பட்டியலில் முதல் 10 இடத்தில் எந்தவொரு இந்தியா வீரரும் இல்லை.

Next Story