Top
undefined
Begin typing your search above and press return to search.

டெஸ்ட் பேட்டிங் தரவரிசை: இரண்டாவது இடத்திற்கு சரிந்தார் - விராட் கோலி!

டெஸ்ட் பேட்டிங் தரவரிசை: இரண்டாவது இடத்திற்கு சரிந்தார் - விராட் கோலி!

Vignesh KBy : Vignesh K

  |  26 Feb 2020 11:41 AM GMT

ஐசிசி டெஸ்ட் போட்டி பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடிக்க ஸ்டீவ் சிமித் மற்றும் விராட் கோலி இடையே பெரும் போட்டி நடந்து வருகிறது. ஆஷஸ் போட்டியில் சிறப்பாக விளையாடி முதல் இடத்தை பிடித்துள்ளார் ஸ்டீவ் சிமித்.

அதன் பின்னர் வங்காளதேசம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்து மீண்டும் விராட் கோலி முதல் இடத்தை தக்கவைத்தார். இதற்கு இடையில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் சிமித் சிறப்பாக விளையாடவில்லை.

இந்த தருணத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சேரியாக விளையாடவில்லை. இதனால் இரண்டாவது இடத்திற்கு சரிந்தார். ஸ்டீவ் சிமித் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

ஸ்மித் 911 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், விராட் கோலி 906 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் மற்றும் கேன் வில்லியம்சன் 853 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

Next Story