Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்தியா - நியூசிலாந்து எதிரான டெஸ்ட் போட்டியில் ட்ரெண்ட் போல்ட், அஜாஸ்படேல் சேர்ப்பு!

இந்தியா - நியூசிலாந்து எதிரான டெஸ்ட் போட்டியில் ட்ரெண்ட் போல்ட், அஜாஸ்படேல் சேர்ப்பு!

Vignesh KBy : Vignesh K

  |  17 Feb 2020 10:23 AM GMT

இந்தியா கிரிக்கெட் அணி விராட்கோலி தலைமையில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்று ஐந்து டி20 போட்டிகள் ,மூன்று ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் விளையாடி வருகிறது.

இதில் இந்தியா 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை 'ஒயிட்வாஷ்' செய்தது. ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 3-0 என்ற கணக்கில் இந்தியாவை வென்றது.

டெஸ்ட் போட்டி வரும் 21ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த நிலையில் நியூசிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட், கெய்ல் ஜேமிசன் மற்றும் சுழற்பந்து அஜாஸ்படேல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

டிரென்ட் போல்ட் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் காயம் ஏற்பட்டதால் அவர் இந்தியாவுடன் டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாட வில்லை.

கெய்ல் ஜேமிசன் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தான் நியூசிலாந்து அணிக்கு அறிமுகமானார். தற்போது டெஸ்டில் இடம் பெற்றுள்ளார்.

அஜாஸ் படேல் இவர் சுழற்பந்து வீச்சாளர் இதுவரை 7 டெஸ்டுகளில் மட்டுமே விளையாடி உள்ளார். மேலும் இவர் இந்திய வம்சாவளி என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story