Top
undefined
Begin typing your search above and press return to search.

விராட் கோலியின் விக்கெட்டை எடுக்க வேண்டும் - நியூசிலாந்து அணியின் வேக பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட்!

விராட் கோலியின் விக்கெட்டை எடுக்க வேண்டும் - நியூசிலாந்து அணியின் வேக பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட்!

Vignesh KBy : Vignesh K

  |  19 Feb 2020 4:42 AM GMT

இந்தியா கிரிக்கெட் அணி விராட்கோலி தலைமையில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்று ஐந்து டி20 போட்டிகள் ,மூன்று ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் விளையாட உள்ளது.

இந்த நிலையில் டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. பின்னர் ஒருநாள் போட்டியில் 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி வென்றது. டெஸ்ட் போட்டி வரும் 21ஆம் தேதி துவங்கிறது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் தற்போது அணிக்கு திரும்பியுள்ளார். அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் காயம் ஏற்பட்டதால் அவர் இந்தியாவுடன் டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாட வில்லை.

இந்தியாவுடன் இருக்கும் டெஸ்ட் தொடரை விளையாட உள்ளார்.

இந்த தருணத்தில் டிரென்ட் போல்ட் தெரிவித்தது விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்த காத்திருக்க முடியாது என்றார்.


இது குறித்து அவர் கூறியது ''தனிப்பட்ட முறையில் போட்டிகளில் விளையாடும்போது விராட் கோலி போன்ற சிறந்த வீரர்களை வீழ்த்த வேண்டும் என்று நினைப்பேன்.ஆனால் விராட் கோலியை விக்கெட் விழும் வரை காத்திருக்க முடியாது.

விராட் கோலி தலைசிறந்த வீரர். அவரின் ஆட்டம் எப்பிடி இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும்.

Next Story