Top
undefined
Begin typing your search above and press return to search.

பெண்கள் முத்தரப்பு டி20 கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றி!

பெண்கள் முத்தரப்பு டி20 கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றி!

Vignesh KBy : Vignesh K

  |  12 Feb 2020 9:12 AM GMT

ஆஸ்திரேலியாவில் பெண்கள் கிரிக்கெட் முத்தரப்பு டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் இரண்டு முறை லீக் போட்டியில் விளையாட வேண்டும். இந்த தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ,இந்தியா விளையாடியது. மேலும் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் இறுதி போட்டியில் விளையாடும்.

லீக் ஆட்டம் முடிந்த பிறகு இறுதி போட்டிற்கு ஆஸ்திரேலியா-இந்தியா முன்னேறியது. அந்த இறுதி போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்றது. அதில் முதல் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா பெண்கள் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் அடித்தது.பின்னர் களம் இறங்கிய இந்தியா பெண்கள் அணி 20 ஓவரில் 144 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா பெண்கள் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் கோப்பையும் கைப்பற்றியது.

Next Story