Top
undefined
Begin typing your search above and press return to search.

அமெரிக்காவன் பேஸ்பால் பயிற்சியாளர் கொரோனாவால் பலி!

அமெரிக்காவன் பேஸ்பால் பயிற்சியாளர் கொரோனாவால் பலி!

Vignesh KBy : Vignesh K

  |  2 April 2020 1:07 PM GMT

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி கொண்டு இருக்கிறது. இதனால் 47ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று அமெரிக்காவில் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் 2 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர் மற்றும் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் நியூயார்க் நகரம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த தருணத்தில் நியூஜெர்சியில் உள்ள கிளிஃப்சைட் பார்க் பள்ளியில் பேஸ்பால் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்த 30 வயதேயான பென் லுடெரர் கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்து உயிரிழந்தார்.

உயிரிழந்த பென் லுடெரர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story