Top
undefined
Begin typing your search above and press return to search.

விராட் கோலியின் விக்கெட்டை அதிக முறை வீழ்த்திய நியூசிலாந்து வேக பந்து வீச்சாளர்!

விராட் கோலியின் விக்கெட்டை அதிக முறை வீழ்த்திய நியூசிலாந்து வேக பந்து வீச்சாளர்!

Vignesh KBy : Vignesh K

  |  11 Feb 2020 5:08 AM GMT

நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி இவர் தான் விராட் கோலியின் விக்கெட்டை ஒன்பது முறை வீழ்த்தி இருக்கிறார்.

இந்தியா கிரிக்கெட் அணி விராட்கோலி தலைமையில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்று விளையாடி வருகிறது.

இதில் இந்தியா 20 ஓவர் தொடரை 5 - 0 என்ற கணக்கில் கைப் பற்றி நியூசிலாந்தை 'ஒயிட்வாஷ்' செய்தது.

ஆனால் தற்போது இந்தியா ஒருநாள் போட்டியில் முதல் 2 ஆட்டத்தில் தோற்று ஒரு நாள் தொடரை இழந்தது.

இந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் டிம் சவுத்தி இந்தியா அணி கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தினார். அந்த போட்டியின் மூலம் டிம் சவுத்தி கோலியை 9 முறை வீழ்த்தியுள்ளார்.




இதனை குறித்து நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி கூறுகையில்:

விராட் கோலி உண்மையாக உலகத்தின் சிறந்த வீரர். அவரிடம் பலவீனத்தை காண இயலாது. புது பந்தின்போது ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். அப்போது பந்தை சரியான இடத்தில் பிட்ச் செய்தல் தான் விக்கெட்டை வீழ்த்த முடியும்.

என்னை போன்ற பந்து விசாளரின் வேலை விக்கெட்டுகளை எடுப்பது தான். விராட் கோலி உலகின் சிறந்த வீரர். அவரின் விக்கெட்டை எடுப்பது சிறப்பானதாக கருதுகிறேன்'' என்றார் டிம் சவுத்தி.

Next Story