Top
undefined
Begin typing your search above and press return to search.

ரோஹித் சர்மா சாதிக்க இது தான் காரணம் - வி.வி.எஸ் லட்சுமண்.!

ரோஹித் சர்மா சாதிக்க இது தான் காரணம் - வி.வி.எஸ் லட்சுமண்.!

Vignesh KBy : Vignesh K

  |  30 May 2020 12:19 PM GMT

கிரிக்கெட் போட்டிகளில் ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்கும் திறன் ரோஹித் சர்மாவிடம் இருந்தது தான் அவர் ஐபிஎல் போட்டியில் சிறந்த கேப்டனாக சாதிக்க காரணம் என வி.வி.எஸ் லட்சுமண் தெரிவித்துள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியில் இந்திய அணியின் தொடக்க மற்றும் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். அவருடைய தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. அந்த ஆண்டுகள் 2013ஆம் ஆண்டு, 2015 ஆம் ஆண்டு, 2017 ஆம் ஆண்டு, 2019ஆம் ஆண்டு இவருடைய வெற்றி வருடமாக இருந்தது.

இவர் ஐபில் போட்டியின் ஆரம்ப காலத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் 2008 முதல் 2010 வரை விளையாடி உள்ளார்.


இதனைப்பற்றி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லட்சுமண் கூறியது: கடந்த 2008 ஆம் ஆண்டில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடிய ரோகித் சர்மா, பின்பு இந்திய சர்வதேச போட்டிகளில் இளம் வீரராக விளையாடினார். அந்த சமயத்தில் மிடில் ஆர்டரில் களம் இறங்கி விளையாடுவார். இவர் டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் இருந்தபோதும் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. ஆனால், இவருக்கு டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கேப்டன் பதவி தேடி வந்துள்ளது.

பின்னர், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இவருடைய செயல்பாடு சிறப்பாக இருந்தது. போட்டியின் இக்கட்டான சூழ்நிலை மற்றும் நெருக்கடிகளையும் இவர் கையாளுவது சிறப்பாக இருக்கும். இவருடைய பேட்டிங் தான் அணியை வெற்றி பெறுவதற்கு கைகொடுக்கும். இதனால் தான் இவரால் ஐபிஎல் போட்டியில் சிறந்த கேப்டனாக சாதிக்க முடிந்துள்ளது என வி.வி.எஸ் லட்சுமண் தெரித்துள்ளார்.

Next Story