Top
undefined
Begin typing your search above and press return to search.

பெண்கள் டி20 உலக கோப்பை: வங்காளதேசம் அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது இந்தியா அணி!

பெண்கள் டி20 உலக கோப்பை: வங்காளதேசம் அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது இந்தியா அணி!

Vignesh KBy : Vignesh K

  |  25 Feb 2020 5:18 AM GMT

ஆஸ்திரேலியாவில் பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. நேற்று நடந்த 6-வது லீக் போட்டியில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதின.

டாஸ் வென்ற வங்காளதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் அடித்தது. இதில் ஷபாலி வர்மா அதிரடியாக விளையாடி 17 பந்தில் 4 சிக்ஸ், 2 பவுண்டரியுடன் 39 ரன்கள் விளாசினார்.

பின்னர் களம் இறங்கிய வங்காளதேசம் அணி தொடக்க வீராங்கனை முஷிதா கதுன் 30 ரன்களும் மற்றும் நிகர் சுல்தானா 35 ரன்களும் அடித்தனர். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறினார். ஆட்டம் முடிவில் வங்காளதேசம் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது.


இதனால் இந்தியா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Next Story