Top
undefined
Begin typing your search above and press return to search.

பெண்கள் டி20 உலக கோப்பை: இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா அணி!

பெண்கள் டி20 உலக கோப்பை: இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா அணி!

Vignesh KBy : Vignesh K

  |  5 March 2020 7:22 AM GMT

ஆஸ்திரேலியாவில் பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் லீக் போட்டிகள் முடிந்து இன்று அரை இறுதி போட்டி துவங்குகிறது. இரு அரை இறுதி போட்டி இந்தியா - இங்கிலாந்து, ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகிறது.

இதில் குரூப் ஏ பிரிவில் முதல் இடத்தில் இந்தியா அணியும், இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா அணியும் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. குரூப் பி பிரிவில் முதல் இடத்தில் தென்னாபிரிக்கா அணியும், இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து அணியும் தகுதி பெற்றன.

குரூப் ஏ பிரிவில் உள்ள முதல் அணியும் - குரூப் பி பிரிவில் உள்ள இரண்டாவது அணியும் மோதும்.

குரூப் ஏ பிரிவில் உள்ள இரண்டாவது அணியும் - குரூப் பி பிரிவில் உள்ள முதல் அணியும் மோதும்.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே அரை இறுதி போட்டி இன்று நடைபெற இருந்தது. ஆனால் மழை பெய்த காரணத்தால் டாஸ் கூட போடாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதன் காரணத்தால் புள்ளி கணக்கு அடிப்படையில் பட்டியலில் 'ஏ' பிரிவில் முதல் இடத்தில் இருந்த இந்தியா அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

Next Story