Top
undefined
Begin typing your search above and press return to search.

தலைமைச் செயலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர் கொரோனாவால் பாதிப்பு - தலைமைச்செயலகம் மூடப்படுகிறதா?

தலைமைச் செயலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர் கொரோனாவால் பாதிப்பு - தலைமைச்செயலகம் மூடப்படுகிறதா?

Vignesh KBy : Vignesh K

  |  21 May 2020 12:24 PM GMT

தலைமைச் செயலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

தலைமைச்செயலகத்தில் பொதுக்கணக்கு குழு என்ற பிரிவு உள்ளது. அந்த பிரிவில் செங்கல்பட்டை சேர்ந்த ஊழியர் உதவியாளராக வேலை பார்த்து வருகின்றார். நேற்று அவர் வேலைக்கு வந்த நிலையில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் இன்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் வேலை பார்த்து வந்த அறையை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்து அறை மூடப்பட்டது.

கொரோனா வைரஸ் காரணத்தால் அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக விடுமுறையில் இருந்தனர். கடந்த 18ஆம் தேதி முதல் 50% ஊழியர்களுடன் தலைமைச் செயலகம் செயல்பட்டு வருகிறது. அங்கு பொதுக் கணக்குக் குழு பிரிவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஊழியருடன் தொடர்பில் இருந்த ஊழியர்களுக்கு பரிசோதனை நடத்துகின்றனர்.

Source: https://tamil.news18.com/news/coronavirus-latest-news/a-man-who-is-working-in-secretariat-has-corona-riz-abh-293431.html

Next Story